Sunday 25 March 2012

சித்திரைமாதத்தில்  சித்திரகுப்தர்

பூஜை

(Chitragupta Puja)

 

 பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களினைப் பற்றிய முழு விபரங்களினையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும். மனிதர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் நல்ல செயல்களிற்கேற்றாற்போல பாவம் செய்யும் மானிடர்களை நரகத்திற்கும், நல்ல செயல்களைப் பின்பற்றுபவர்களினை சொர்க்கத்திற்கும் அனுப்பவல்ல சக்தியினை உடையவர் சித்ரகுப்தர். கயஷ்தா இனத்தவரால் போற்றப்படுகின்ற கடவுளாகவும் சித்திரகுப்த மகாராஜா விளங்குகின்றார்.


தென்னிந்தியாவில் இவருக்காகப் பல கோயில்கள் உண்டு குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஷித்ரகுப்தர், யமன், ப்ரம்மா உடன் கடம்பூர் தல இறைவனை வணங்கும் காட்சி கடம்பூர் தலத்தில் இடம் பெற்றுள்ளது. தேனி மாவட்டம்

கோடாங்கிபட்டியில் இவருக்குசித்திர புத்திர நாயனார் என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 

 

  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், அவர்களது பாவங்களை குறைப்பார் என்பதும் ஒரு நம்பிக்கை.
  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று பெண்கள் விரதமிருந்து உப்பில்லாத உணவு உண்டு இவரை வேண்டிக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலம் அதிகமாகும் என்பது நம்பிக்கை.
  •  

    சித்திரகுப்த மகாராஜா வருக ! வாழ்வில் அனைத்து வளங்கள் தருக!! என்று ஒரு பலகைள் எழுதி சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூஜை அறையல் வைத்து வழிபடல் மிக நன்று .

     இதுபோல செய்தால் நம் பாவ புனிய கணக்கு எல்லாம் சரியாய் இருக்கும் என்பது நம்பிக்கை.

     

     

     

     

     

     

     

 

Tuesday 20 March 2012

பங்குனி உத்திரம்

பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.  உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

பங்குனி உத்திரத்தன்றுதான் நாமக்கல்லிலும் தேர்த்திருவிழா நடைபெறும். இலட்சுமி நரசிம்மரும் நாககிரித் தாயாரும் தம்பதி சமேதராய் தேரில் உலா வருவர். இதே நன்னாளில் தான் சிதையின் கரத்தையும் பற்றினார் இராமர்.

பங்குனி உத்திரத்தில் பிரசன்னவெங்கடேசர், சித்திரா பவுர்ணமியில் கள்ளழகர், வைகாசி விகாசத்தில் கூடலழகர் என்று மூவரும் பவுர்ணமி நாளில் வைகையில் எழுந்தருள்வது சிறப்பு. 

பங்குனி உத்திரம் முருகனுக்கும் , பெருமாளுக்கும் இது உகந்த நாள் .


பங்குனி உத்திரம் ஏப்ரல் 5 ,2012  வருகிறது .




 

Sunday 18 March 2012

 
அம்மாவசை என்பது வளர்பிறையா,தேய்பிறையா ?

அம்மாவசைதிதி  என்பது  தேய்பிறைதிதி , பிரதமை திதி முதல் பௌர்ணமி திதி வரை உள்ள திதி வளர்பிறைதிதி என்பதுஆகும்.





Thursday 15 March 2012



மஹா ப்ரத்யங்கரா மந்திரம் 


கோர ரூபே மஹா ப்ரத்யங்கரா, ஸர்வ ஷத்ரு பயங்கரீ |
பக்த்யேப்யோ வரதே தேவீ த்ராஹிமாம் சரணாகதம் ||

இம்மந்திரத்தை முவ் வேளையும் 3 முதல் 12 முறை ஜெபிக்க ஷத்ருஜெயம் நல்கும்.






தசரதன் அருள்பெற்ற திருப்புல்லாணி!

 
பூரி ஜெகந்நாதருக்கும் முற்பட்டவர் திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர்; இவர், 72 சதுர் யுகங்களுக்கு முன் தோன்றியவராம்! திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தத் தலம், ராமேஸ்வரத்துக்கு அருகில், சேதுக்கரையிலிருந்து வடக்கே, சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே, ஆதிஜெகந்நாதர் நித்யவாசம் செய்த அரசமரத்தைத் தரிசிக்கலாம். புல்லவர், கண்ணுவர், காலவர் ஆகிய முனிவர்களுக்குத் தங்கமயமான அச்வத்த மரமாகக் காட்சி தந்தாராம் பெருமாள். இவர்கள் வேண்டுகோளை ஏற்று, இங்கேயே கோயில் கொண்டாராம். அதுமட்டுமா? நான்கு வேதங்களும் உனக்கு நான்கு பிள்ளைகளாகப் பிறக்கும் என்று தசரதன் அருள்பெற்றதும், சீதையைத் தேடிவந்த ஸ்ரீராமருக்கு வில் அருளப்பெற்றதும் இந்தத் தலத்தில்தான்!


ராமநவமி
 

 ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.
 
 ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்..

விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்ன பலன் கிடைக்க!

ஸ்ரீராமராமராமேதி ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம்ராமநாம வரானனே ||

இந்த மந்திரத்தை மூன்று தடவை கூறினால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும்.
 
3 தடவை சொன்னா ஆயிரம் தடவை சொன்ன மாதிரி!

ராமநாமத்தை மூன்று முறை சொன்னால் ஆயிரம் முறை சொன்னதாக அர்த்தம். இதற்கு காரணம் உண்டு. ராம என்ற சொல்லில் ரகர வரிசையில் ரா இரண்டாவது எழுத்து. ம என்பது ப, ப, ப,ப, ம என்ற ஸ்வர வரிசையில் ஐந்தாவது எழுத்து. இரண்டையும் பெருக்கினால் பத்து வரும். இதை மும்முறை சொன்னால் 10*10*10 = 1000 முறை சொன்னதாக பொருள் கொள்ளலாம். 

 ராமநவமி வரும் 31 . 3 .2012  அன்று காலை 9 .38  மணிக்கு  நவமி ஆரம்பிக்கும்.







மாமன்னன் ராஜ ராஜ சோழன் சமாதியை பாருங்கள்


Raja raja Solan resting place


உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன்,1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன்,உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை ,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்.



ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மந்திரம் 
 

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோறணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷணபைரவாஅய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

 
தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் அமையும் இராகு காலத்தில்  ஜபிக்க வேண்டும். 
மேலும் வெள்ளிகிழமை அன்று உலிர்ந்த திராட்சை 27 திராட்சை மாலையாக போட்டுவந்தால் நினைத்த காரியம் நடைபெறும் இது உண்மை .


 

 
மஹாலட்சுமி அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும்

 

ஸ்ரீ தேவிஹி அம்ருதோத்
பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச
வராரோஹீ ச ஸார்ங்கிணீ
ஹரி-ப்ரியா தேவ-தேவி
மஹாலக்ஷ?மீ ச ஸுந்தரீ


ட்சுமி ஹ்ருதயம் என்ற இதைக் குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, பிரதி தினம் காலையில் 10 முறை; வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, அதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால் செல்வம் உண்டாகும். வேலை கிடைக்கும்.



 ஐஸ்வர்யங்களும் அனனத்தும்  கிடைக்க 
 
அஷ்டஸக்தி ஸம்ருத்திஸ்ரீ ரஷ்டைஸ்வர்ய ப்ரதாயக:
அஷ்டபீடோப பீடஸ்ரீ ரஷ்டமாத்ரு ஸமாவ்ருத:
அஷ்டபைரவ ஸேவ்யாஷ்ட வஸுவந்த்யோஷ்ட மூர்த்திப்ருத்
அஷ்டசக்ர ஸபுபுரந்மூர்த்தி ரஷ்டத்ரவ்ய ஹவி: ப்ரிய:



 

Monday 12 March 2012

திருமணம் நடைபெற



கல்யாணரூப: கல்யாண: கல்யாண குண ஸம்ரய:
ஸுந்தரப்ரூ: ஸுநயந:ஸுலலாட: ஸுகந்தர:
 
இந்த ஸ்லோகத்தை காலை, மாலை இருவேளையும் பதினெட்டு தரம் ஜபித்து வர திருமணம் ஆகாத ஆண், பெண் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும்.







பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று)

ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ
 
 
பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாள் வருவது பஞ்சமி திதி. பஞ்ச என்றால் ஐந்து எனப்பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும். பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.


















தினமும் பெண்கள் கூற வேண்டியது
 

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே


  மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும். 



ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்
 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ
செல்வம் கிடைக்க
 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்ரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:




வியாபாரத்தில் லாபம் உண்டாக

லக்ஷ லக்ஷ ப்ரதோ லக்ஷ?யோ லயஸ்தோ லட்டுக ப்ரிய:
லாஸ்ய ப்ரியோ லாஸ்ய பதோ லாப க்ருல்லோக விஸ்ருத:


இதைப் பலதடவை கூறிவர லாபம் கிடைக்கும்.





ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய 
                                                            சதுரங்க பந்தம் 
                                          CHADHURANGA BANDHAM

எதிரிகளின் சூழ்ச்சிகளைவெல்ல,மனக்கவலைகள் நீங்க,இழந்த செல்வத்தை மீட்க,இடர் நீங்கி இன்பம் பெறவும் ஏற்றது.
 
 
 
 
சஸ்த்ர பந்தம் 
                                            SASTHRA BANDHAM
வியாபாரம்,தொழில்,பதவி சிறக்கவும்,எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாக திகழ்வது.
 
 
 
 
 
 
 
 
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய

                                                                      துவித நாகபந்தம்
                                     THUVITHA NAGA BANDHAM

சர்ப்பதோஷம், காலசர்ப்பதோஷம்,அடிக்கடி பாம்புகளின் தொல்லை,
மாலை சுற்றிப் பிறந்த தோஷம் மகப்பேறுகால துன்பம், இராகு, கேது
கிரக தோஷம் நீங்கப் பெறலாம்.



Saturday 10 March 2012

நதி தோஷம்

ங்கை நீங்களாக மற்ற நதிகளில் ஆடி மாதம் முதல்மூன்றுநாட்கள் குளிக்க கூடாது. இந்த மூன்று நாட்களும் நதிகளுக்குரிய தீட்டு
நாட்களாகும். விடியற்காலை 4மணி முதல் 5மணி வரை முனிவர்கள் குளிக்கும்
நேரம். காலை5மணி முதல் காலை 6-30மணி வரை மனிதர்கள் குளிக்கும்
நேரம்.காலை 6-30க்கு மேல் குளிப்பது அசுரர்கள் நேரம்.இந்த நேரம் குளிப்பதற்க்கு
நல்லதல்ல. ரிஷிவேளையில் குளித்து இறைவ்வனை வணங்கிட வாழ்வு சிறக்கும்.
குழந்தை ,ஸந்தான பாக்கியம்,பெற


1)பராம்ஹம் பாத்மம் வைஷ்ணவஞ்ச சைவம் பாகவதம்
ப விஷ்யம் நார தீயஞ்ச மார்க்கண்டேயம் அதஃபரம் !!
ஆக்ணேயம் ப்ரமாஹ வைவர்த்தம் சலிங்கம் வராஹமே வச
ஸ்காந்தஞ்ச வாமனம் சைவ கெளர்மம் மாத்ஸ்யம் காருடமேவச !
ப்ரம் ஹாண்டஞ்ச புராணாளி பட தாம் புத்ரதாளி ச !!


இந்த 18புராணங்கள் பெயரை நித்தம் ஒரு முறையும்,கார்த்திகை சுக்ல பஷ்த்
த்வாதசியில் 108முரையும் ஜபித்தால் மலடு தோஷம் அகன்று குழந்தை பிறக்கும்.


2)இந்த சுலோகத்தை ஜபித்து வர குழந்தை பிறக்கும்.


புருஷ ஸுக்த ஜபேன புருஷப்ரஜா ஜாயதே !
விஷ்ணும் யோனிம் ச ஸுக்தேன ஸ்திரீ தோஷ: அபஹார்யதே !!


3)ஆண் குழந்தை பெற : தினமும்108முறை ஜபித்து ஸ்ரீராமருக்கு பாயாசம்
நைவேத்யம் செய்த்ஹு குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஆண் க்குழந்தை பிறக்கும்.


கெளஸல்யா அஜநயத் ராமம் ஸர்வவ லஷண ச்ம்யுதம் !
விஷ்ணோ: அர்த்தம் மஹாபாகம் புத்ரம் ஐ லஷ்வாக வர்த்தனம் !!
ஸ்ரீராமரை விஷ்னுவின் அம்சமானவரை கெளசல்யை பெற்றாள்.


4) பிரசவ வேளையில் இந்த சுலோகத்தை பெண்ணின் காதில் ஓத சுகப்பிரசவம்
ஏற்ப்படும்.


ஷிதிர் ஜலம் வியத்தேஜோ வாயுர் விஷ்ணு ப்ரஜாபதி !!


5) வம்சம் தழைக்க:


பானோ பாஸ்கர மார்த்தாண்ட
சண்டரஸ்மின் திவாகர !
ஆயுர் ஆரோக்கியம் ஜஸ்வர்யம்
வித்யாம் தேஹி நமோஸ்துதே !! 







Thursday 8 March 2012

கண்பார்வை திருந்த

 
அக்ரணீர் - க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண:
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்




கலைகளில் தேர்ச்சி பெறவும், நினைவாற்றலுக்கும்

 
ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்
அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரனாத் பவேத்.


இதை தினமும் 12 முறை கூறவும்.
தேர்வில் வெற்றி பெற

 
வித்யா வித்யாகரீ வித்யா வித்யாவித்யா ப்ரபோதிநீ
விமலா விபவா வேத்யா விஸ்வஸ்தா விவிதோஜ்வலா


இந்தச் சுலோகத்தை 11 தரம் காலையில் ஜபித்து வந்தால், ஞாபக சக்தியும் தேர்வில் வெற்றியும் கிடைக்கும்.





ஆபரண சேர்க்கை கிடைக்க

 
ரத்னப்ராகார மத்யஸ்த்தா ரத்நமண்டப மத்யகா
ரத்நாபிஷேக ஸந்துஷ்டா ரத்நாங்கீ ரத்நதாயிநீ



இந்த சுலோகத்தை காலையில் 10 முறை ஜபித்து வந்தால் பெண்களுக்கு நகைகள், ரத்தினங்கள் இவையெல்லாம் கிடைக்கும்.




Wednesday 7 March 2012

சுகப்பிரசவத்திற்கான ஸ்லோகம்





1.ஹிமவத்ய தத்ரே வார்ஸ்வே ஸீரதா நாம யக்க்ஷ?ணி
  தஸ்யா: ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணீபவேது


2.ஹர நம : பார்வதீபதயே
  ஹர ஹர மஹாதேவ
  ஜானகீ காந்த ஸ்மரணம்
  ஜய ஜய ராம ராம




எப்போதும் கூறிக்கொண்டேயிருக்க வேண்டிய ஸ்லோகம்






கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்


 
ஹே, சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலினி
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாஸோ
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே
மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக;
ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது
ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்ஷ?ணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்பிணி பவேத்.




பெண்கள் கருவுற

 


கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
கதா தந்தே வாணீ - முககமல தாம்பூலா ஸதாம்.


காலையில் வடக்கு நோக்கி உட்கார்ந்து கீழே உள்ள சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும். முழுநம்பிக்கையுடனும், தீவிர ஈடுபாட்டுடனும் செய்யவும்





குழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம்
 
தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ
தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்

ஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம்

 
யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே


இதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.



பூத, பிரேத பிசாசுகளின் தொல்லைகள் நீங்க

 
பூராபோக்நிர் மருத் வ்யோமா அஹம் க்ருத் ப்ரக்ருதி: புமாந்
ப்ரஹ்மா விஷ்ணு: ஸிவோ ருத்ர ஈஸ: ஸக்தி: ஸதாஸிவ:
த்ரிதஸா: பிதர: ஸித்தா: யக்ஷõ: ரக்ஷõஸ்ச கிந்நரா:
ஸாத்யா வித்யாதரா பூதா: மநுஷ்யா: பஸவ: ககா:



வழக்குகளில் வெற்றி பெற

 
மேதாத: கீர்த்தித: ஸோக ஹாரீ தௌர்பாக்யநாஸந:
ப்ரதிவாதி முகஸ்தம்ப: துஷ்டசித்த ப்ரஸாதந:


இதைக் கூறினால் வழக்குகளில் நமக்கு வெற்றி உண்டாகும்.

Saturday 3 March 2012

வாஸ்து தோஷம் விலக

மணி பிளானட் அல்லது மூங்கில் செடி  ஹாலில் வைக்கவும் 
அல்லது சிரிக்கின்ற குபேர பொம்மையை   ஹாலில்  டிவி மீது வைக்கலாம்
ஓர் கிளாஸ் டம்பளர்   தண்ணீர் விட்டு ஓர் எலுமிச்சம் பழம் போட்டு வைத்தால் 
திருஷ்ட்டி தோஷம் விலகும் ( மூன்று நாட்களுக்கு ஒரு முறை  தண்ணீரை 
மாற்றி விடுங்கள். எலுமிச்சம் பழம் கெட்டு
 போனால் மட்டும் மாற்றலாம் .

ஆன்மிக துளிகள் .  



காணாமல் போன பொருள் கிடைக்க 
  யாவரும் போற்றும் என்றும் 
      யாங்கணும் உள்ள செல்வா 
   மூவரும் போற்றும் உன்னை
       முறையொடு பூசை செய்யின் 
   போனதோர் பொருளும் சேரும்
       தீனபந் தேன்றே  உன்னைத்
   தெளிந்தவர் சொன்னார் காக்க
       இந்த ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை 11 நாட்கள் சொல்லி வந்து கடைசி நாளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி பக்தர்களுக்கு வினியோகம் செய்யவும்.

ஆன்மிக துளிகள்.
உயர் பதவி கிடைக்க


"பின்னே திரிந்து உன் அடியரைப்பேணி 
பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் 
முதல்மூவருக்கும் 
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் 
அருமருந்தே 
என்னே இனி உன்னை யான் மறவாமல் 
நின்று ஏத்துவனே

இந்த அபிராமி அந்தாதி ஸ்லோகத்தை தினசரி மூன்று முறை சொல்லி வரவும்.
நீங்கள் நினைத்த காரியங்கள் இடையூறின்றி வெற்றி பெரும்.

ஆன்மிக துளிகள்.
வெப்பு நோய் குணமாக

மாருதி கவசம்

காக்க அசோக வனம் சென்றாய்
கண்டான் அன்னை சீதையினை
நோக்கம் ஒன்றே ராமதூதன்
நுட்ப்பம் வாக்கில் கொண்டானே
ஆக்கம் சேர்க்க இலங்கையினை
ஆழலில் எரிய விட்டவன்தான்
ஆக்கை வெப்பிலே உழலாமல்
அனுமன் என்னை காத்திடுக 



இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று முறை சொல்லி அனுமனுக்கு வெண்ணை நிவேதனம்,செய்யவும் . வெப்பு நோய் குணமாகும்.


ஆன்மிக துளிகள்
வயிற்று வலி நீங்க

சௌந்தரிய லகரி சுலோகம்

தவாதாரே மூலே ஸஹ சமயயா லாஸ்ய- பரயா
நவாத்மானம் மன்யே நவரச- மகாதாண்டவ -நடம்
உபாப்யா- மேதாப்யா-முதய-விதி-முதிச்ய தய்யா
சநாதாப்யம் ஜஜ்ஞெ ஜனகஜனநீம் த ஜகதிதம் 



இந்த ஸ்லோகத்தை தினசரி ஒன்பது முறை ஜபித்து வெண்பொங்கல் நிவேதனம் செய்யது வந்தால் வயிற்று வலி குணமாகும்
.

ஆன்மிக துளிகள்

ஸ்ரீ இராகு - ஸ்ரீ கேது திருத்தலம் 

அருள்மிகு வண்டுசேர்குழலி சமேத ஸ்ரீ சேடபுரீஸ்வரர்(ஸ்ரீ இராகு - ஸ்ரீ கேது திருத்தலம்)

சோழ வளநாட்டின் தேவாரப் பாடல் பெற்ற 190 திருத்தலங்களில் உன்றான இத்திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், என மூறாலும் சிறப்புற்றது.


திரு(பாம்புரம்) தல வரலாறு

திருக்கயிலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவனை வழிபட்டபோது, அவர் கழுத்தில் இருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வம் கொண்டது. அதனால் சினமுற்ற சிவன் நாக இனம் முஉவதும் தன் சக்தியனைத்தும் இழ்கக சாபமிட்டார். பின்னர் அஷ்டமகா நாகங்களின் வேண்டுதலின் பேரில் மனமிறங்கிய இறைவன் பூலோகத்தில் திருப்பாம்புரம் என அழைக்கப்படும் தலத்தில் தன்னை வழிபட்டால் சாபம் தீரும் என கூறினார்.


அவ்வாறே நாகங்களின் அரசனான ஆதிசேடன் மகா சிவராத்திரி மூன்றாம் யாமத்தில் திருக்கோவிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தத்தில்நீ்ராடி இறைவனை ஆலம் விழுதால் தொடுக்கப்பட்ட அகத்திப்பூ மாலை சூட்டி வழிபட்டு சாபவிமசனம் பெற்றார்.


எனவே, இத்தலம் ஸ்ரீகாளகஸ்த்திக்கு இணையானது. இத்தலத்தில் ஆதிசேடனுக்கு மூலவர், உற்சவர் விக்கிரங்கள் உள்ளன. ஈசனின் ஐந்து முகங்களைக் குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்கள் அமைந்துள்ள பஞ்சலிங்க தலமும் கூட. எனவே திது சர்வதஷ பரிகார ஸ்தலம் எனப்படுகிறது.


இந்நாள் வரை இவ்வூரில் அகத்திப் பூப்பதில்லை. ஆலம் விழுதுகள் தரை தொடுவதுமில்லை. மேலும் இந்த ஊரில் பாம்பு தீண்டி இதுவரை யாரும் இறந்ததில்லை. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கவில் ஒரு பஞ்சலிங்க நலமாகும் சுவாமி சந்நதியை சுற்றி கல் அகழி உள்ளது.

ஞாயிறு செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் மல்லிகை, தாழம்பூ, வாசனை அடிக்கும் நேரங்களில் ஆலயத்தில் எங்கேனும் ரிடத்தில் தென்படும் பாம்புகள் இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.

* ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால்.
* 18 வருட இராகுதசா நடந்தால்
* 7 வருட கேதுதசா நடந்தால்
* லக்கனத்துக்கு 2இல் இராகுவோ கேதுவோ இருந்து லக்கனத்துக்கு 8இல் கேதுவோ இராகுவோ இருந்தால்
* இராகு புத்தி, கேது புத்தி நடந்தால்
* களத்ர தோஷம் இருந்தால்
* புத்ர தோஷம் இருந்தால்
* ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் டைப்பட்டால்
* கனவில் அடிக்கடி பாம்பு தோன்றினால்
* பாம்பை தெரிந்தோ, தெரியாமலோ அடித்து விட்டால, கொன்று விட்டால
இக்கோவிலுக்குச் சென்று சாந்தி பரிகாரம் செய்தல் அவசியம் தோஷ நிவர்த்திக்கு வருவோர் செய்ய வேண்டியவை.


1. முதல் நாள் இரவு உளுந்து, கொள்ளு, ரூ. 1.25 ஆகியவற்றை வஸ்திரத்தில் முடிந்து கொண்டு உறங்கவேண்டும்.
2. மறுநாள் காலை ஆதி சேஷ தீர்த்ததில் நீராடிவிட்டு பைய வஸ்திரங்களை தானம் செய்ய வேண்டும்.
3. 7 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
4. சுவாமி, அம்பாள், இராகு, கேது ஆகியருக்கு அபிஷேகம் செய்தபின் பாம்பு புற்றை வழிபட வேண்டும்.
5. அன்ன தானம் வங்கி அவரவர் தோஷத்தை போக்கிக் கொள்ளலாம்.
6. பரிகாரம் செய்ய செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை காலை வேளை உகந்தவை.




ஸ்ரீ இராகு பகவான் ஸ்துதி
வாகுசேர் நெடுமால் முன்னம் வாணவர்க்கமுதம் ஈயப்
போகுமக் காலையுன்றன் புணர்ப்பினால் சிரமேயுற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன் பரன்கையில்-மீண்டும் பெற்ற
றாகுவே உனைத்து திப்பேன் ரட்சிப்பாய்! ரட்சிப்பாய்!



ஸ்ரீகேதுபகவான் ஸ்துதி
மாதுசேர் நெடுமால் முன்னால் மாகிரி - வலமே  போந்து
நீதியால் நடுவகுத்து நிறை தளர் தந்தையைச் சீர்க்கும்
மாதுசேய் கதிர் விழுங்கும் சிவன்கையில் - சிரமேபெற
கேதுவே உனைத் துதிப்பேன் கீர்த்தியாய் ரட்சிப்பாயே! 

திருமால் மோகினி அவதாரம் எடுத்த நேரத்தில், விப்பிரசேனன் என்ற அசுரன் தேவர்களுக்கிடையே தன்னையும் ஒரு தேவனாக்கி அமிழ்தத்தை உண்டணன். அது கண்ட திருமால், தன் கையில் இருந்த சட்டுவத்தால் அவன் தலையைக் கொய்தனர். எனினும் அதற்கு முன்பேயே அவன் அமிர்தம் உண்டிருந்த காரணத்தால் உயிர் பிரியாது திருக்காளத்தி ஈசனை வழிபட்டு நவக்கிரக அந்தஸ்தினைப் பெற்றான். அதாவது துண்டிக்கப்பட்ட தலை ஈசன் அருளால் வளர்ந்து பாம்பு உடலும் கொண்டு இராகு என்றும், மனித உடலும் பாம்பின் தலையும் கொண்டு கேது என்றும் உருமாறினார் என்பர்.


சிறப்பு: இத்தலம் இராகுவும், கேதுவும் ஏகசரீரமாகி ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபவிமோசனம் பெற்ற சிறப்புடைய தலம். இத்தலத்தில் மட்டும் இராகு, கேது ஏக சரீரமாக ஈசனை இதயத்தில் வைத்து வழிபடும் உருவம் கற்சிலையாக உள்ளது. இந்தச் சிலை அமைப்பு வேறு எந்தத் திருக்கோவிலிலும் காண இயலாத ஒன்று.

வழித்தடம்: மயிலாடுதுறையிலிருந்து 10C  நகரப்பேருந்து கோவில் வாயிலுக்குச் செல்கிறது. பேரளத்திலிருந்து மினி பஸ் (சிற்றுந்து) கோவில் வாயிலுக்குச் செல்கிறது.


கும்பகோணம்-காரைக்கால் மார்க்கத்தில் சுமார் 25கி.மீ. தூரத்தில் உள்ள கற்கத்தி என்ற இடத்தில் இருந்து கற்கத்திக்குத் தெற்கே சுமார் 3கி.மீ. தூரத்தில் திருப்பாம்புரம் உள்ளது. 

ஆன்மிக துளிகள்.

 

கந்தர் சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை

குறள் வெண்பா

அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்
பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம்பாடக் கிண்கிணியாட
மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா வெண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருக வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்
சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி யாறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியும் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழுகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நண்மணி பூண்ட நவரத்தின மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செகண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்
றுண்டிரு வடியை உறுதியென் றென்னும்
என்றனை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினை காக்க
விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனை பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை யிரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவ ளிருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் யெனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க
அரையிரு டன்னில் அனையவேல் காக்க
ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியி நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்லபூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைக டின்னும் புழக்கட முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமரா க்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிலும் எதிர்படு மன்னரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைக ளென்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோரும்
ஓதுமஞ் சணமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
கட்டி யுருட்டு கைகால் முறியக்
கட்டுக் கட்டுக் கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதிற் செதிலாக
சொக்கு சொக்கு சூர்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடுத்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைஷயங் குன்மம் சொக்கச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீயெனக் கருள்வாய்
ஈரே ழலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
சரஹண பவனே சையொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே
அரிதிரு மருக அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்னாவிருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினே னாடினேன் பரவசமாக
ஆடினே னாடினேன், ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றி யிலணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன்னரு ளாக
அன்புட னிரஷி அன்னமும சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைகுற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்கவென் வறுமைக நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவ நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துட னாளும்
ஆசா ரத்துடனே அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகி
கந்தர் சஷ்டி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே nஐபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளொர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணிந்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள்ள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெற்றி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.


ஆன்மிக துளிகள்.


பாணினி மாமுனிவர்

 



கல்லைப் போல் வறட்சியான மொழி அறிவியலை வாடாத மணமுள்ள மலராக்கியவர் பாணினி. பாணினியின் அஷ்டாத்யாயி, நவமணிகள் நன்கு பதித்த ஒரு பெரிய அணிகலன். 395 சூத்திரங்களில் சம்ஸ்கிருதத்தின் சொல்வளம் முழுவதையும் நுணுக்கமாக அமைத்தார் பாணினி. எந்த மொழியிலும் பெயரும் வினையும் முக்கியமான சொல்வகைகள், ஒரே விகுதி கொள்ளும் பல சொற்கள் ஒரு விதிக்குள்ளே அடங்குவதை பாணினி கண்டார். வகை வகையான விதிகளுக்குள் அடங்கும் இத்தகைய பெயர்ச் சொற்களைக் கூட்டங் கூட்டமாக வகைப்படுத்தினார். பெயர்ச்சொற்களின் இக்கூட்டத்துக்கு, கணபாடம் என்பர், உதாரணமாக நத்யா திப்யோ டக் என்ற சூத்திரத்தால், நதியில் உண்டானது - நாதேயம் என்றாகிறது. இது போல, சம்ஸ்கிருதத்திலுள்ள சொற்கள், 2115 தாதுக்களைக் (வினைவேர்களை) கொண்டு இயங்குவதை பாணினி கண்டார். இவற்றை அவர் பத்துப் பிரிவுகளாகத் தொகுத்தார்; தாதுக்களும் அவற்றின் அர்த்தங்களும் அடங்கிய இத்தொகுதி தாதுபாடம் எனப்படும். பெயர்ச் சொற்களில் வரும் வேற்றுமை விகுதிகளை பாணினி ஒரே சூத்திரத்தில் ஸு என ஆரம்பித்து ப் என்று முடித்தார். அதனால் இதற்கு ஸுப் என்று பெயர். இப்படிப் பல எழுத்துக்களை சூத்திரத்திலிருந்து சுருக்கின் கூறும் முறை ப்ரத்யாஹாரம் என்ப்படும். இப்படி வினை விகுதிகள் எல்லாம் ஒரே சூத்திரத்தில் தி என்று தொங்கி ங் என முடிக்கிறார். அதனால் இதற்கு திங் என்று பெயர். ஸுப்திஙந்தம் பதம். ஸுபதம் என்பது பெயர்ச்சொல்; திஙந்தம் என்பது வினைச்சொல்.
பெயரடியாக வந்த பெயர்ச் சொல்லுக்கு தத்திதம் என்றும், வினையடியாக வந்த பெயர்ச் சொல்லுக்கு க்ருதந்தம் என்றும் பெயர். இப்படி சம்ஸ்கிருத மொழியிலுள்ள நுணுக்கங்கள் அனைத்தையும் ஒருங்கே ஆராய்ந்து அறிவியல் முறையில் இலக்கணத்தை அமைத்தவர் பாணினி. அதனால்தான் பதஞ்சலி, பாணினி சூத்திரத்தின் அமைப்பில்தான் என்ன அழகு ! என வியக்கிறார். உழைப்பும் ஆராய்ச்சியும் :  பிற்காலத்தில் வியாகரணத்துக்குத் தம்மையே மக்கள் ஆதாரமாகக் கொள்வார்கள் என்று தமது பொறுப்பை நன்கு உணர்த்த பாணினி, தர்ப்பத்தை அணிந்து தூய கையினராக, கிழக்கு முகமாக அமர்ந்து, ஆழ்ந்த ஆராய்ச்சியுடனும் பேருழைப்புடனும் அஷ்டாத்யாயியை இயற்றினார் என மஹா பாஷ்யகாரரான பதஞ்சலி குறிப்பிடுகிறார். பாணினி வாக்கு : பாணினியின் இலக்கணம் சம்ஸ்கிருத மொழியை மட்டுமின்றி, பழங்காலக் கல்வெட்டுக்களையும் நாணயங்களையும் போல் பாரதப் பண்பாட்டைப் பற்றியும் அறிவதற்கு முக்கியச் சான்றாகத் திகழ்கிறது. பாணினி தாம் கண்ட ஐநூறு ஊர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அந்த ஊர்கள் அத்தனையும் இன்றும் இருக்கின்றன. பாணினி மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டவர். வாழ்வில் நாம் அன்றாடம் வழங்கும் சொற்களைப் பாணினி விளக்கும் முறை எளிது. பாணினி இலக்கணம், உலகம் கண்ட இலக்கியப் படைப்புகளுள் மிகச் சிறந்தது; பாணினியின் வியாகரணம்உண்மையிலே சமஸ்கிருதத்தின் ஒரு வகையான இயற்கைச் சரித்திரம் என்றார் கோல்ட்ஸ்டுகர்.
அக்காலத்திய பல மொழிகளில் பாணினி வல்லவர்;  பாணினியின் வாக்கு, இன்றும் உலகெங்கும் பெருவழக்காக நீடித்திருந்து, மேலோங்கி வாழ்கிறது - பாணிநீ சப்தோ லோகே ப்ரகாசதே என்று காசிகாகாரர் சொன்னது எவ்வளவு உண்மை ! தம்மையே தந்தவர் : பாடலிபுத்திரத்துக்குப் புறப்பட்ட நாளிலிருந்து தமது இறுதி நாள் வரையில், பாணினி சொல்லுலக யாத்திரிகராகவே வாழ்ந்தார். பல மாணவர்களுக்கு பாணினி பாடம் கூறி வந்தார். அவரது மாணவர்களில் முக்கியமானவர் கௌத்ஸர்.  ஒரு நாள் மாலை, காட்டில் சீடர்களுக்கு பாணினி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். நீரருந்த ஒரு புலி ஏரிக்கு வந்தது. புலி வருவதைக் கண்ட மாணவர்கள் மரங்களில் ஏறிக்கொண்டனர். பாணினி புலியைப் பார்த்தார். ஆனால் அவர் அசையவில்லை. அசைவனவும் நிற்பனவுமான இந்த உலகை விழுங்கி ஆட்கொள்ளும் பரம்பொருளே புலியுருவில் நம்மிடம் வருகிறது - அத்தா சராசரக்ரஹணாத் என் அவர் கருதினார். அக்கணத்திலும், புலியைக் குறிக்கும் ஒரு சொல்லைப் பற்றி அவர் ஆராய்ந்தார் ! புலிக்கு வ்யாக்ர : என்று பெயர். காட்டு விலங்குகள் எல்லாவற்றுக்குமே மோப்பச் சக்தி உண்டு. புலிக்கு அது சிறப்பாக அமைந்தது. புலி சுற்றிச் சுற்றி வந்து மோப்பம் பிடிப்பதால், வ்யாஜிக்ர தீதி வ்யாக்ர: - வ்யாக்ரம் என்று அதைச் சொல்கிறார்கள் என அவர் கண்டுபிடித்தார். இறக்கும் தறுவாயிலும் உலகுக்கு ஒரு சொல்லின் தன்மையை அவர் உணர்த்திச் சென்றார். பாணினி சிங்கத்துக்கு இரையானதாகப் பஞ்ச தந்திரம் கூறும். பாணினி உடலை உகுத்த தினம் திரயோதசி என்பர். மாதமும் பக்ஷமும் தெரியாமையால், இன்றும் காசி முதலிய இடங்களில் ஒவ்வொரு திரயோதசியையும் வியாகரணம் பயிலாத (அநத்யயன) தினமாக வைத்துள்ளார்கள். மக்கள் அறியாமையுடன் பேசும் சொற்களிலுள்ள குறைகளை, பாணினி புனிதமாக்கி, மங்கலச் சொற்களை வழங்க வைத்து, மக்களின் அறியாமையை அறவே நீக்கினார். அந்த மாமுனி பாணினியை நாம் வணங்குவோம்.

தத்தாத்ரேயர்






ஓம் நமோ பகவதே தத்தாத்ரேயாய:


அத்ரி மகரிஷியின் மனைவி அனுசுயை. பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு இணையான ஒரு குழந்தையை பெற விரும்பி கடும் தவம் மேற்கொண்டாள். ஒரு சமயம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மூவரும் பதிவிரதையான அனுசுயையின் கற்பை சோதிக்க பிரம்மா, விஷ்ணு, சிவனை அனுப்பினார்கள். மும்மூர்த்திகளும் அனுசுயையிடம் சென்று அவர்களது உடலில் உடை ஏதும் இல்லாமல் தங்களுக்கு யாசகம் வேண்டினார்கள். இக்கட்டான இந்த சூழ்நிலையில் அனுசுயை தனது கணவனான அத்ரிமகரிஷியை மனதால் தியானித்து அவரது பாதங்களை நீரால் கழுவி அந்த நீரை மும்மூர்த்திகளின் மீது தெளித்தாள், உடனே மூவரும் பச்சிளம் குழந்தையாக மாறினார்கள். அதன்பின் உடையற்ற தன்மடி மீது அந்த குழந்தைகளை கிடத்தி பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்ரிமகரிஷி வீடு திரும்பியதும் மூன்று குழந்தைகளையும் அவர் பாதத்தில் கிடத்தினாள். மகரிஷியும் குழுந்தைகளை வாரி அணைத்தார். அணைத்த உடனே அந்த 3 குழந்தைகளும் இரண்டு கால்கள், ஒரு உடல், மூன்று தலைகள் மற்றும் 6 கைகளுடன் கூடிய உருவமாக மாறின. இந்த உருவமே தத்தாத்ரேயர் எனப்பட்டது. அனுசுயையின் விருப்பத்தை  பூர்த்தி செய்யவே மும்மூர்த்திகளும் இவ்வாறு வந்தனர் எனக் கூறி மகரிஷி அனுசுயையை ஆசிர்வதித்தார். 

நாமும் தத்தாத்ரேயரை வழிபட்டு மும்மூர்த்திகளை வழிபட்ட பலனை பெறுவோம்.


ஆன்மிக துளிகள்.
Seriale online