Saturday 3 March 2012

ஸ்ரீ இராகு - ஸ்ரீ கேது திருத்தலம் 

அருள்மிகு வண்டுசேர்குழலி சமேத ஸ்ரீ சேடபுரீஸ்வரர்(ஸ்ரீ இராகு - ஸ்ரீ கேது திருத்தலம்)

சோழ வளநாட்டின் தேவாரப் பாடல் பெற்ற 190 திருத்தலங்களில் உன்றான இத்திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், என மூறாலும் சிறப்புற்றது.


திரு(பாம்புரம்) தல வரலாறு

திருக்கயிலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவனை வழிபட்டபோது, அவர் கழுத்தில் இருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வம் கொண்டது. அதனால் சினமுற்ற சிவன் நாக இனம் முஉவதும் தன் சக்தியனைத்தும் இழ்கக சாபமிட்டார். பின்னர் அஷ்டமகா நாகங்களின் வேண்டுதலின் பேரில் மனமிறங்கிய இறைவன் பூலோகத்தில் திருப்பாம்புரம் என அழைக்கப்படும் தலத்தில் தன்னை வழிபட்டால் சாபம் தீரும் என கூறினார்.


அவ்வாறே நாகங்களின் அரசனான ஆதிசேடன் மகா சிவராத்திரி மூன்றாம் யாமத்தில் திருக்கோவிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தத்தில்நீ்ராடி இறைவனை ஆலம் விழுதால் தொடுக்கப்பட்ட அகத்திப்பூ மாலை சூட்டி வழிபட்டு சாபவிமசனம் பெற்றார்.


எனவே, இத்தலம் ஸ்ரீகாளகஸ்த்திக்கு இணையானது. இத்தலத்தில் ஆதிசேடனுக்கு மூலவர், உற்சவர் விக்கிரங்கள் உள்ளன. ஈசனின் ஐந்து முகங்களைக் குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்கள் அமைந்துள்ள பஞ்சலிங்க தலமும் கூட. எனவே திது சர்வதஷ பரிகார ஸ்தலம் எனப்படுகிறது.


இந்நாள் வரை இவ்வூரில் அகத்திப் பூப்பதில்லை. ஆலம் விழுதுகள் தரை தொடுவதுமில்லை. மேலும் இந்த ஊரில் பாம்பு தீண்டி இதுவரை யாரும் இறந்ததில்லை. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கவில் ஒரு பஞ்சலிங்க நலமாகும் சுவாமி சந்நதியை சுற்றி கல் அகழி உள்ளது.

ஞாயிறு செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் மல்லிகை, தாழம்பூ, வாசனை அடிக்கும் நேரங்களில் ஆலயத்தில் எங்கேனும் ரிடத்தில் தென்படும் பாம்புகள் இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.

* ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால்.
* 18 வருட இராகுதசா நடந்தால்
* 7 வருட கேதுதசா நடந்தால்
* லக்கனத்துக்கு 2இல் இராகுவோ கேதுவோ இருந்து லக்கனத்துக்கு 8இல் கேதுவோ இராகுவோ இருந்தால்
* இராகு புத்தி, கேது புத்தி நடந்தால்
* களத்ர தோஷம் இருந்தால்
* புத்ர தோஷம் இருந்தால்
* ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் டைப்பட்டால்
* கனவில் அடிக்கடி பாம்பு தோன்றினால்
* பாம்பை தெரிந்தோ, தெரியாமலோ அடித்து விட்டால, கொன்று விட்டால
இக்கோவிலுக்குச் சென்று சாந்தி பரிகாரம் செய்தல் அவசியம் தோஷ நிவர்த்திக்கு வருவோர் செய்ய வேண்டியவை.


1. முதல் நாள் இரவு உளுந்து, கொள்ளு, ரூ. 1.25 ஆகியவற்றை வஸ்திரத்தில் முடிந்து கொண்டு உறங்கவேண்டும்.
2. மறுநாள் காலை ஆதி சேஷ தீர்த்ததில் நீராடிவிட்டு பைய வஸ்திரங்களை தானம் செய்ய வேண்டும்.
3. 7 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
4. சுவாமி, அம்பாள், இராகு, கேது ஆகியருக்கு அபிஷேகம் செய்தபின் பாம்பு புற்றை வழிபட வேண்டும்.
5. அன்ன தானம் வங்கி அவரவர் தோஷத்தை போக்கிக் கொள்ளலாம்.
6. பரிகாரம் செய்ய செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை காலை வேளை உகந்தவை.




ஸ்ரீ இராகு பகவான் ஸ்துதி
வாகுசேர் நெடுமால் முன்னம் வாணவர்க்கமுதம் ஈயப்
போகுமக் காலையுன்றன் புணர்ப்பினால் சிரமேயுற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன் பரன்கையில்-மீண்டும் பெற்ற
றாகுவே உனைத்து திப்பேன் ரட்சிப்பாய்! ரட்சிப்பாய்!



ஸ்ரீகேதுபகவான் ஸ்துதி
மாதுசேர் நெடுமால் முன்னால் மாகிரி - வலமே  போந்து
நீதியால் நடுவகுத்து நிறை தளர் தந்தையைச் சீர்க்கும்
மாதுசேய் கதிர் விழுங்கும் சிவன்கையில் - சிரமேபெற
கேதுவே உனைத் துதிப்பேன் கீர்த்தியாய் ரட்சிப்பாயே! 

திருமால் மோகினி அவதாரம் எடுத்த நேரத்தில், விப்பிரசேனன் என்ற அசுரன் தேவர்களுக்கிடையே தன்னையும் ஒரு தேவனாக்கி அமிழ்தத்தை உண்டணன். அது கண்ட திருமால், தன் கையில் இருந்த சட்டுவத்தால் அவன் தலையைக் கொய்தனர். எனினும் அதற்கு முன்பேயே அவன் அமிர்தம் உண்டிருந்த காரணத்தால் உயிர் பிரியாது திருக்காளத்தி ஈசனை வழிபட்டு நவக்கிரக அந்தஸ்தினைப் பெற்றான். அதாவது துண்டிக்கப்பட்ட தலை ஈசன் அருளால் வளர்ந்து பாம்பு உடலும் கொண்டு இராகு என்றும், மனித உடலும் பாம்பின் தலையும் கொண்டு கேது என்றும் உருமாறினார் என்பர்.


சிறப்பு: இத்தலம் இராகுவும், கேதுவும் ஏகசரீரமாகி ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபவிமோசனம் பெற்ற சிறப்புடைய தலம். இத்தலத்தில் மட்டும் இராகு, கேது ஏக சரீரமாக ஈசனை இதயத்தில் வைத்து வழிபடும் உருவம் கற்சிலையாக உள்ளது. இந்தச் சிலை அமைப்பு வேறு எந்தத் திருக்கோவிலிலும் காண இயலாத ஒன்று.

வழித்தடம்: மயிலாடுதுறையிலிருந்து 10C  நகரப்பேருந்து கோவில் வாயிலுக்குச் செல்கிறது. பேரளத்திலிருந்து மினி பஸ் (சிற்றுந்து) கோவில் வாயிலுக்குச் செல்கிறது.


கும்பகோணம்-காரைக்கால் மார்க்கத்தில் சுமார் 25கி.மீ. தூரத்தில் உள்ள கற்கத்தி என்ற இடத்தில் இருந்து கற்கத்திக்குத் தெற்கே சுமார் 3கி.மீ. தூரத்தில் திருப்பாம்புரம் உள்ளது. 

ஆன்மிக துளிகள்.

 

No comments:

Post a Comment

Seriale online