Friday 14 September 2012

உணவு  முறை:

  
உணவை பரிமாறும் போது தண்ணீர், இனிப்பு வகைகள், பொரியல், கூட்டு, அப்பளம், வடகம், துவையல், பழம், இவற்றை பரிமாறியபின் கடைசியில் தான் சாதம் பரிமாற வேண்டும்.
சாதத்தை முதலில் பரிமாற கூடாது.
 
 
 
கண் மை :


  
நம் நாட்டில் இயற்க்கை பொருட்களால் தயாரிக்கப்படும், கண் மை இடும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. அதற்க்கு பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களின் அழகு சாதன பொருட்களை மக்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். வெளி நாட்டு நிறுவன பொருட்களுக்கு நான் எதிரி அல்ல. ஆனால் நம் நாட்டு இயற்க்கை பொருட்களின் மதிப்பு என்ன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கண் மை, குழந்தைகளுக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்கவும், பெண்களின் கண்ணழகை அதிகப்படுத்தி காட்டவும் உபயோகிக்கப்படுகின்றன.
 இதில் மேலும் பல மறைக்கப்பட்ட நன்மைகள் இருக்கின்றன.
 கண் மை, இட்டுக் கொண்டால், பல் வேறு விதமான் தீய சக்திகளிடம் இருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம் உடலில் தீய சக்திகள் இருந்தாலும் அதை இந்த கண் மை வெளியேற்றி விடும்.
செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் மற்றும் பல தீய சக்திகளால் பாதிக்க பட்டவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த கண் மையை, நெற்றி பொட்டில் இட்டுக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பல் வேறு விதமான் தீய சக்திகளிடம் இருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம் உடலில் தீய சக்திகள் இருந்தாலும் அதை இந்த கண் மை வெளியேற்றி விடும்.




வாழ்க்கை பின்பற்றுவது  சில முறைகள் 


குளியல்:

    
ஒரு நாளைக்கு அதிக பட்சமாக இரண்டு முறை குளிக்கலாம்.
ஒரு நாளைக்கு மூன்று முறை குளித்தால் அது தரித்திரமாகும்.
பல வீடுகளில் பலர் ஞாயிற்று கிழமைகளில் குளிப்பதே இல்லை.
குளிக்காமல் சாப்பிடுவது தோஷத்தை உண்டாக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் “கூழானாலும் குளித்து குடி”  என்று சொன்னார்கள்.
ஞாயிற்று கிழமைகளில் பலர் சாயங்காலம் வெளியே குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ, விருந்துகளுக்கோ, பூங்காகளுக்கோ, கடற்கரைக்கோ, அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கோ செல்லும் போது சாயங்காலம் குளித்து விட்டு புத்துணர்ச்சியாக புறப்படலாமே என்று நினைக்கிறார்கள். அது மிகவும் அதிகமான தோஷத்தை கொடுக்கும். காலையிலேயே குளித்து விட வேண்டும்.
இன்னும் பல குடும்பங்களில், “இப்பவே குளிச்சிட்டு என்னத்த கிழிக்க போறீங்க?” என்று பாச மழை பொழியும் மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, பல ஆண்கள் ஞாயிற்று கிழமைகளில் குளிப்பதே இல்லை.


செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், மற்றும் பல தீய சக்திகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் – புதன் கிழமையன்றும், சனிக்கிழமையன்றும்
பெண்கள் – செவ்வாய்க்கிழமையன்றும், வெள்ளிக்கிழமையன்றும்
நல்லெண்ணைக்கு பதிலாக வேப்பெண்ணையை தேய்த்து குளிக்கலாம்.
 
 
 


Seriale online